செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கலே

1)
பெண் - கழுத்துக்கு தாலி வாங்கி தாங்க மச்சானே

ஆண் - தாலியின் விலை அதிகமாச்சடி ஆகையினாலே மஞ்சள் கயிற்றை வாங்கித் தாரேன் கட்டிக்கொள்ளடி

டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கலே
டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கலே

2)
பெண் - காதுக்கு தோடு வாங்கி தாங்க மச்சானே

ஆண் - தோட்டின் விலை அதிகமாச்சடி ஆகையினாலே பூவை பறித்து தாரேன்  மாட்டிக்கொள்ளடி

டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கலே
டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கலே

3)
பெண் - காலுக்கு கொலுசு வாங்கி தாங்க மச்சானே

ஆண் - கொலுசின் விலை அதிகமாச்சடி ஆகையினாலே சைக்கிள் சங்கிலியை கழற்றி தாரேன் மாட்டிக்கொள்ளடி

டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கலே
டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கலே

4)
பெண் - இடுப்புக்கு ஒட்டியாணம் வாங்கி தாங்க மச்சானே

ஆண் - ஒட்டியாணத்தின் விலை அதிகமாச்சடி ஆகையினாலே சைக்கிள் ரிம்மை கழற்றிதாரேன் மாட்டி கொள்ளடி

டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கலே
டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கலே

5)
பெண் - கைக்கு காப்பு வாங்கி தாங்க மச்சானே

ஆண்  - காப்பின் விலை அதிகமாச்சடி ஆகையினாலே சைக்கிள் டயரை கழற்றி தாரேன் மாட்டிக்கொள்ளடி

டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கலே
டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கலே

6)
பெண் -மூக்குக்கு மூக்குத்தி வாங்கி தாங்க மச்சானே

ஆண் - மூக்குத்தியின் விலை அதிகமாச்சடி ஆகையினாலே வேப்பங்குச்சி பிடுங்கித்தாரேன் மாட்டிக்கொள்ளடி

டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கா டிங்கிரி டிங்கலே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.